பிரதேச சபைத் தவிசாளரின் முன்மாதிரி

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் அ. ஆனந்த, மாணவர் கல்வி அபிவிருத்திக்கான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

வறுமைக்கோட்டில் வாழும் மக்களைக் கொண்ட தமது பிரதேசங்களின் பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு தவிசாளர் ஆனந்த இந்த செயல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

குறிப்பாக தமது சொந்த நிதி மூலம் கல்வி அபிவிருத்திக்கான இத்தகைய செயற்திட்டங்களை தவிசாளர் ஆனந்த முன்னெடுத்து வருவதையிட்டு பொது மக்கள் பெரும் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.

தவிசாளர் ஆனந்தவின் இத்தகைய முன்மாதிரி செயற்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவது குறித்து நாவிதன் வெளி பிரதேச கல்விசார் அமைப்புக்கள் பலவும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள கமு - சது - றாணமடு இந்துக்கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, பாடசாலை நூலகத்திற்கு தனது சொந்த நிதியிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட பெறுமதி வாய்ந்த நூல்களை தவிசாளர் ஆனந்த அன்பளிப்பு செய்துள்ளார்.

கல்லூரி அதிபர் க. கதிரைநாதனிடம் கல்லூரி வளாகத்தில் வைத்து தவிசாளர் இந்த நூல்களைக் கையளித்தார்.

பிரதேச சபைத் தவிசாளரின் முன்மாதிரி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)