
posted 23rd November 2022
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்திய பிரதேச கலாசார விழாவும் "எழுவான்" சிறப்பு மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பும் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் 2022.11.22 ஆந் திகதி மாலை களுதாவளை கலாசார மண்பத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம .கௌரவ சிறப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி.கென்னடி பாரதி. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா. சுதர்சன். ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன் கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர்களான க.மோகனதான் கலாநிதி. க.சிவரெத்தினம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விழாவில் பிரபல எழுத்தாளர் தமிழ் மணி உமா வரதராஜன் சிறப்பு சொற்பொழிவாற்றினார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)