
posted 25th November 2022

இறந்துகிடந்த முதலை
தொண்டைமானாறு பகுதியில் முதலையொன்று வீதியில் இறந்த நிலையில் காணப்பட்டது.
அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதியிலேயே முதலை உயிரிழந்த நிலையில் காணப்பட்டது.
உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொண்டைமானாறு ஏரியில் முதலை இருப்பதாக ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.