பலவகைச் செய்தித் துணுக்குகள்

பணம் கொள்ளை

மானிப்பாய் சுதுமலைப் பகுதி வீடொன் றில் ஞாயிற்றுக்கிழமை (06) திருட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதன்போது 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டுப்போயுள்ளதாக குறித்த வீட்டவர்கள் தெரி வித்தனர்.

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.



தோற்கடிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை

யாழ்ப்பாணம் பல. நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சி. லோகசிவத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று தோற்கடிக்கப்பட்டது.

கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஜனநாயக முறையில் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மூன்று இயக்குநர்களும் பொதுச் சபையின் சில உறுப்பினர்களும் இணைந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்திருந்தனர்.

கூட்டுறவு திணைக்கள பிரதிநிதி முன்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் தலைவருக்கு ஆதரவாக பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதையடுத்து, தொடர்ந்தும் யாழ்ப்பாணம் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ச. லோகசிவம் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



போதைப் பொருளுடன் அகப்பட்ட இளைஞர்கள்

காங்கேசன்துறை இளவாலை பொலிஸாரினால் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளவாலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (06) திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரிடம் போதைப்பொருள் மீட் கப்பட்டது.

அதேவேளை, மற்றுமொரு மோட் டார் சைக்கிளில் பயணித்த இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞனை சோதனையிட்டபோதும் அவரிடம் இருந்தும் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



யாழில் அதிகரிக்கும் ஹெரோய்ன் அடிமைகள்

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாத்திரம் உயிர்கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையான 183 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

கடந்த ஒக்ரோபர் மாதம் மாத்திரம் 183 பேர் உயிர்கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள் என்று மருத்துவப் பரிசோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 155 பேர் சிறைச்சாலையிலிருந்து மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட் டுள்ளனர். 28 பேர் நீதிமன்றத்தின் ஊடாக அனுப்பப்பட்டடு மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட் டுள்ளனர்.

இதனைவிட தாமாக முன்வந்து சமூக மயப்படுத்தல் சிகிச்சையில் இணைந்து கொள்ளும் உயிர்கொல்லி ஹெரோய் னுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் தெரிவிக்கப்படு கின்றது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)