
posted 14th November 2022
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரனும், சிறப்பு விருந்தினராக யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவநிபுணர் ப. சத்தியகுமார் , அச்சுவேலி பிரதேச மருத்துவமனையின் பொறுப்பதிகாரி மருத்துவ நிபுணர் பி. குணதீபன் மற்றும் திரு.மதுரமணி இராசையா ஆகியோர் பங்கேற்று சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்தனர்.
அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் இயங்கி வரும் பற்சிகிச்சை நிலையம் நீண்ட காலமாக வசதிகளற்ற நிலையில் இயங்கி வந்தது. மக்கள் நல்வாழ்வு மையத்தின் 16 இலட்சம் ரூபாய் நிதி உதவியில் இந்த நிலையம் மேம்படுத்தப்பட்டது.
இந்த சிகிச்சை நிலையம் மூலமாக அச்சுவேலி மற்றும் அதனை அண்மித்த பல கிராம மக்கள் நன்மையடையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)