
posted 21st November 2022
பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று (21) காலை 9:30 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடாத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் திருமதி கிருபா கிரிதரன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை இரண்டு மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்துடன் மாவீர்களுக்கு அக வணக்கம் இடம் பெற்றதை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்றிலிருந்து எதிர்வரும் 27 ம் திகதிவரை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)