
posted 16th November 2022
இலங்கை கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டுதலுடன் பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டித் தொடரின் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நாளை 17 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கின்றது.
இலங்கை ஜனநாயக சோஷலிஷக் குடியரசின் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில், கொழும்பு – 07, பண்டார நாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த தேசிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு தொடர்பாக, தேசிய போட்டிப் பிரிவில் வெற்றிபெற்றவர்களுக்கு கலாச்சார அவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே அழைப்புக்கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
தேசிய இலக்கிய கலையை மிளிரச் செய்வதற்காக வழங்கும் உன்னத சேவையை கௌரவிக்கும் முகமாக இந்த நிழ்வு இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ள பணிப்பாளர் தரணி அனோஜா கமகே, நிகழ்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வருகை தரும் போது குறித்த கடிதம் மற்றும் அழைப்புடன் வருகை தருமாறும் கோரியுள்ளார்.
இதேவேளை நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் முக்கிய உறுப்பினரான ஜெம்சித் ஹஸன் தேசிய மட்டத்திலான மேற்படி சிறுகதைப்போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)