நாளை புத்தளத்தில் பேராளர் மாநாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு நாளை 7 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு புத்தளம், கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்தக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இம் மாநாட்டில் நாடெங்கிலுமிருந்து கட்சியின் பேராளர்கள் கலந்து கொள்வர்.

அதற்கு முன்னதாக, இன்று 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கொழும்பில், கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய பதவிகள் இடைநிறுத்தப்பட்ட மூன்று கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் பேராளர் மாநாட்டிற்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதேவேளை இவர்களில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் வகித்த பதவிகளை அவர்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

நாளை புத்தளத்தில் பேராளர் மாநாடு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY