
posted 25th November 2022
இலங்கையில் இருந்து நேற்று (24) காலை ஐந்து பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் தொடர் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பலரும் தமிழகத்திற்குத் தப்பிச் செல்லும் நிலையில் நேற்று காலையும் ஐந்து பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியை அண்டிய முதலாவது தீடையை சென்றடைந்தனர்.
இவ்வாறு சென்றவர்களில் இரு ஆண்களும், 3 பெண்களும் அடங்குகின்றனர்.
இவ்வாறு தமிழகம் சென்ற 5 பேரையும் மரையன் பொலிஸார் மீட்டு மண்டபம் முகாமுக்கு கொண்டு சென்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY