செல்வச் சந்நிதியான் ஆச்சிரம உதவிகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிழக்கு மாகாணத்திற்கு ஆன்மீகச் செயற்றிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அம்பாறை மாவட்டம் - பொத்துவில் பிரதேச செங்காமம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 3ம் கட்டமாக ரூபா 50,000 நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட்டதுடன், பொத்துவில் பிரதேச றொட்டைக் கிராமத்தில் அமைந்துள்ள வீரையடி பிள்ளையார் ஆலய நிர்வாக சபையினரிடம் பிள்ளையார் விக்கிரகம் கையளிக்கப்பட்டது.

இச் செயற்றிட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார். இவ் உதவித்திட்ட நிகழ்வுகளில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

செல்வச் சந்நிதியான் ஆச்சிரம உதவிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)