சுய புலமைசார் படைப்புக்கு விருது
சுய புலமைசார் படைப்புக்கு விருது

உமாவரதராஜன்

தமிழ் இலக்கிய உலகின் புகழ்மிக்க எழுத்தாளரான உமாவரதராஜனின் 2019 இல் வெளியான “மோகத்திரை” நூலுக்கு சுயபுலமைக்கான விருதும், கௌரவமும் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாவில் தமது இந்த நூலுக்கான விருதையும் கௌரவத்தையும் எழுத்தாளர் உமாவரதராஜன் பெற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.ஈ.எம். டபிள்யூ திசா நாயக்க தமையில் நடைபெற்ற இந்த தமிழ் இலக்கிய விழாவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்ஸார், உமா வரதராஜனுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கி இந்த கௌரவத்தை அளித்தார்.

ஈழத்தின் இலக்கியப் பேராளுமையாக மிளிரும், கிழக்கிலங்கையின் பாண்டிருப்பை சேர்ந்த தமிழ் மணி உமா வரதரபாஜன் தனக்கு சினிமா தந்த அனுபவங்களையும் அது பற்றிய மனக்குறிப்புகளையும் கொண்டதாக இலக்கிய உலகிற்குத் தந்த “மோகத்திரை” நூல் தமிழ் நாடு காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வெறிவந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், உள்மனயாதட்தipர (சிறுகதை) மூன்றாம் சிலுவை (நாவல்) உமாவரதராஜன் கதைகள் (சிறுகதை) மோகத்திரை போன்ற நூல்கள் எழுத்தாளர் உமா உவரதராஜனால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல இந்திய எழுத்தாளர் ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” எனும் நாவல் பற்றிய விமர்சனக்கட்டுரை மூலம் தமது 17ஆவது வயதில், உமாவரதராஜன் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்.

சுய புலமைசார் படைப்புக்கு விருது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)