
posted 10th November 2022
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி. என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக நேற்றுக் (09) காலை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது. இதனால், மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. மறவன்புலவு (ஜே/298), வரணி வடக்கு (ஜே/339), வடலியடைப்பு (ஜே/145) ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலேயே குறித்த பாதிப்புகள் இடம்பெற்றுள்ளன என்று தரவுகள் மூலம் அறிய வருகின்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)