
posted 18th November 2022
யா/வரணி மத்திய கல்லூரியிலிருந்து மாகாணமட்ட போட்டிகளில் பங்குபற்றி இடங்களைப்பெற்று தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 17-11-2022 இன்று கல்லூரி முதல்வர் திரு ஆ. தங்கவேலு தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் திரு சி. பிரபாகரன் அவர்களும், நலன்விரும்பியும் பழைய மாணவனுமான திரு.த. பரஞ்சோதி அவர்களும், பழைய மாணவர் சங்கசெயலாளர் திரு.து. இளங்குமரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்காக அமரர் தங்கம்மா கோவிந்தி அவர்களின் நினைவாக நிதிப்பங்களிப்பினை வழங்கியதுடன், அவரது பிள்ளைகள் திருமதி கதிர்காமநாதன் இந்திரவதனி அவர்களும் திரு. கோவிந்தி ஜெயராசா அவர்களும் கலந்து கொண்டனர்.
சதுரங்கபோட்டி சாதனையாளர்களான செல்வி சி. வசிகா, செல்வி.வே. ஜிந்துசா, செல்வி.உ. தரணிகா, செல்வி.ஜீ. அதிசயா, செல்வி.ர.கோபிரம்மியா, செல்வி.வி. கம்சிகா, செல்வி.ர. யமீனா ஆகியோருக்கும், சமூகவிஞ்ஞான போட்டியின் சாதனையாளர்களான செல்வி.இ. சுவர்க்கா, செல்வி.கி.விதுசா, செல்வி.வ. கவீனா, செல்வன்.யோ. லக்சிகன் ஆகியோருக்கும், தமிழ்த்தினப் போட்டியின் சாதனையாளர் செல்வி .து. யதுசா ஆகியோருக்கு நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)