சாதனையாளர்களை கௌரவிப்பு செய்தல்

2022 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட கடேட் முகாமில் கலந்து சிறந்த அடைவை பெற்று கொண்ட அல் அஷ்ரக் கனிஷ்ட, சிரேஷ்ட மாணவ கடேட் அணிகளை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் A.அப்துல் கபூர் அவர்களின் தலைமையில் பாடசாலையின் காசிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை கல்வி வலய உடற்கல்விப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் ULM. சாஜித் (SLEAS) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இன்றைய நிகழ்வில் மாகாண மட்ட ஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவான மாணவ மாணவிகளுக்கு இந் நிகழ்வின் போது கௌரவிப்பு செய்யப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் கடேட் பிரிவின் கனிஷ்ட ,சிரேஸ்ட் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் பதக்கம் அணிவித்து சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் எமது பாடசாலையின் சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியரும் , பாடசாலையின் முப்படைகளின் பொறுப்பாசிரியருமாகிய MIM. அஸ்மி அவர்களை பாடசாலையின் சிரேஸ்ட் கடேட் பிரிவு மாணவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள், பாடசாலையின் ஆசிரிய, ஆசிரியைகள் , கல்வி சாரா ஊழியர்கள் SDEC, பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

சாதனையாளர்களை கௌரவிப்பு செய்தல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)