
posted 15th November 2022
சர்வதேச நீரிழிவு தினமான நேற்று (14) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் ஆரம்பித்த பேரணி யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி ஊடாக வேம்படி சந்தியை அடைந்து பிரதான வீதியை ஊடாக மாவட்ட செயலகத்தை அடைந்தது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பேரணியில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர்கள், மருத்துவர்கள், தாதியர்கள், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சர்வதேச நீரிழிவு தினம் நவம்பர் 14ஆம் திகதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில் மக்களிடையே நீரிழிவு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையால் இந்தப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)