
posted 28th November 2022
நானாட்டான் பிரதேச செயலகம் 2022ம் ஆண்டிற்கான சர்வதேச சிறுவர் தினத்தை கடந்த வாரம் இறுதியில் சூரியகட்டைக்காடு புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடியது.
இத் தினத்தை முன்னிட்டு மரநடுகை கலைநிகழ்ச்சிகள் மற்றும் பெற்றோர் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் சிறப்பு விருந்தினர்களாக நானாட்டான் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய குருக்கள் ஜி.வி.கதிரேசன் குருக்கள் கட்டக்காடு பங்குத் தந்தை அருட்பணி பி. ஸ்ரனிஸ் சோசை அடிகளார் மன்னார் ஜிசாத் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எஸ். இருதயநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் சுமார் நானூறுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)