சந்நிதியான் ஆச்சிரமம் தெல்லிப்பளை  ஆதார வைத்திய சாலைக்கு செய்த உதவி

தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலை புற்றுநோய் பிரிவிற்க்கு தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் 8,00,000 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்கள் இன்று 30/11/2022 வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் ஏற்பட்டுள்ள மருத்துவ பொருள்களின் பற்றாக் குறையை கருத்தில் கொண்டே இம் மருத்துவப் பொருள்களை வைத்திய அத்தியட்சகரிடம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

இவ் உதவித் திட்டத்தில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

சந்நிதியான் ஆச்சிரமம் தெல்லிப்பளை  ஆதார வைத்திய சாலைக்கு செய்த உதவி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)