
posted 28th November 2022

'மெசிடோ' நிறுவனம் வடக்கு பகுதியில் முன்னெடுத்துவரும் திட்டங்களில் ஒன்றாக யாழ் தீவகப் பெண்கள் வலை அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இயைஞர், யுவதிகளுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய வழிகாட்டி வலுவூட்டல் நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், இளைஞர்களுக்கான தலைமைத்துவம், பால்நிலை சமத்துவம், ஒற்றுமை, குழுசெயற்பாடு, விடாமுயற்சி போன்ற பயிற்சிகள் செயல் முறை விளக்கத்துடன் வழங்கப்பட்டன.
இதில் 60 க்கும் மேற்பட்ட அப்பகுதி இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டதுடன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ யாழ் தீவக வலயமைப்பின் நிர்வாகத்தினர், நெடுந்தீவு பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)