
posted 4th November 2022
இளவாலை, சேந்தாங்குளம் கடற்கரைப் பகுதியில் இருந்து, 60 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் தொண்டிப் பகுதியில் இருந்து ஓர் இரகசிய படகு வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (04) காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கஞ்சா தொகுதி கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியினை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இளவாலை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)