கால்நடை குறுக்கே பாய்ந்தமையால் விபத்து ஒன்றால் இளைஞன் மரணம்.

புத்தளம் நாகவில் பகுதியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலே மரணத்த சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

இவ் சம்பவம் ஞாயிற்றுக் கிழமை (13.11.2022) காலை மன்னார் இசைமாலைத்தாழவு பகுதியில் நடுக்காட்டுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது

இது தொடர்பாக மரண விசாரனையிலிருந்து தெரியவருவதாவது ஞாயிற்றுக் கிழமையில் பூங்கன்றுகள் விற்கும் நோக்குடன் அதிகாலை மூன்று மணியளவில் நாகவில் பகுதியிலிருந்து பறப்பட்டு மன்னார் நோக்கி புங்கன்றுகள் விற்கும் வாகனம் வந்துள்ளதாகவும்

அப்பொழுது இசைமாலைத்தாழ்வு பகுதியில் இருவர் பயணித்த இவ் வாகனத்துக்கு குறுக்கே கால்நடை பாய்ந்தபோது அதிலிருந்து மீட்சி பெறுவதற்காக வாகனத்தை வெட்டி எடுத்தபோதே வாகனம் மரத்துடன் மோதி இவ் விபத்து எற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பொழுது சாரதிக்கு அருகாமையிலிருந்து உதவிக்கு வந்த நபர் அஹ்சர் முகமட் அர்பான் (வயது 26) என்ற இளைஞனே சம்பவ இடத்தில் மரணித்தள்ளார்.

இறந்த நபர் மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்தவரும் தற்பொழது புத்தளம் நாகவில் பாலாவி பகுதியில் வசிப்பதாகவும் இவரின் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இவரின் மரண விசாரனையை மன்னார் விசாரனை அதிகாரி எஸ்.ஈ.குணகுமார் மேற்கொண்டதுடன் மரணித்தவரின் ஒன்றுவிட்ட சகோரர் சடலத்தை அடையாளம் காட்டியதுடன் மரணவிசாரனை அதிகாரியிடம் சாட்சியமும் அளித்துள்ளார்.

மரணித்தவரை மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தியபின் உறவினரிடம் சடலத்தை கையளிக்கும்படி மரண விசாரனை அதிகாரி பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்

கால்நடை குறுக்கே பாய்ந்தமையால் விபத்து ஒன்றால் இளைஞன் மரணம்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)