காலாவதியான பொருகள் விற்பனைக்கு அபராதம்

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குள் காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைகளுக்கு 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர எல்லைக்கு உட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் உணவகங்கள், பலசரக்கு கடைகள் மீது திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன்போது, யாழ்ப்பாணம் நகரில் 6 பலசரக்கு கடைகளிலும், குருநகரில் 5 பலசரக்கு கடைகளும், வண்ணார் பண்ணையில் ஓர் கடையிலும் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் 12 பேருக்கும் 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இன்று (30) யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காலாவதியான பொருகள் விற்பனைக்கு அபராதம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)