
posted 11th November 2022
(மக்கள் குரல்)
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் ஆமைகள் நீந்தி விளையாடவும் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதனுடாக பயணிப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையில் ஒரு முக்கிய வீதியாக மதவாச்சி தலைமன்னார் வீதியான ஏ.14 திகழந்து வருகின்றது.
இந்த நிலையில் இந்த வீதியின் மன்னார் தலைமன்னர் பிரதான வீதி பேசாலையில் போக்குவரத்தும் சன நடமாட்ட இடமுமாக இருப்பதுடன் பாடசாலைகளுக்கு மாணவர்கள் தங்கள் துவிசக்கர வண்டிகளில் பயணிக்கும் ஒரு வீதியாகவும் இது அமைந்துள்ளது.
கடந்த ஓரிரு வருடங்களாக மன்னார் தலைமன்னார் இந்த வீதி புனரமைக்கப்பட்டு வந்தது. 'ஏ' தராதரத்திலுள்ள இவ் வீதியானது 'சீ' தராதரத்தில் நிலையிலேயே புனரமைக்கப்பட்டது என மன்னார் பிரiகைள் குழு உட்பட பலரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டி வந்தனர்.
இருந்தபோதும் அது செவிடன் காதில் ஊதின சங்காகவே காணப்பட்டு வருகின்றது எனவும் தற்பொழுது பலரினதும் குரல் ஓங்கி வருகின்றது.
இவ் வீதியின் பேசாலை நகரத்துக்குள் சுமார் 300 மீற்றர் நீளமுள்ள இந்த 'ஏ' 14 வீதியின் அவலநிலையை படங்களில் காணலாம்.
இவ்விடத்தில் வீதி விபத்துக்கள் மாத்திரமல்ல மழை காலங்களிலும் ஏனைய நேரங்களிலும் பாடசாலைகளுக்கு துவிச்சக்கர வண்டியில் செல்லும் மாணவர்கள் விபத்துகளுக்கு உள்ளாகிய நிலையும் எற்பட்டுள்ளது.
வீதி அதிகார சபையிடம் பொது மக்கள் தற்பொழுது முன்வைத்திருப்பது பேசாலையில் இவ் வீதிக்கு அருகாமையிலுள்ள சுமார் 30 மீற்றர் தூரத்திலுள்ள கடலிருந்து ஆமைகள் நீந்தி விளையாட தளம் அமைக்கப்பட்டுள்ளதா அல்லது மழை காலங்களில் இவ் வீதியில் விவசாயம் செய்ய ஏற்பாடா என்ற கேள்விகளை இதனுடாக பயணிப்போரிடமிருந்து எழுந்து வரும் கேள்விகளாக எழுந்து வருகின்றன
ஆகவே வீதி அதிகார சபை இவ் வீதியை உடன் புனரமைக்க நடவடிக்கை எடுக்காவிடில் மக்கள் போராட்டத்தில் குதிப்பதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அறிய வருவதுடன் இதனால் பேசாலையிலிருந்து தலைமன்னார் வரைக்குமான போக்குவரத்துக்கள் பாதிப்படையும் எனவும் பல கிராமபுற மக்களுக்கு இதனால் பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் எனவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)