கழிவுகள் கொட்டப்படுவதனை எதிர்த்து போராட்டம்

யாழ். மாநகரசபைப் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகளை கல்லுண்டாயில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கல்லூண்டாய் வைரவவர் கோவிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை கழிவுகள் தமது பிரதேச சபை எல்லைக்குள் கொட்டப்படுபடுவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாநகர சபையின் கழிவுகளை வலி. தென்மேற்கு பிரதேச சபை உரமாக்குவதற்கு கேட்டதற்கு, மாநகர சபையினர் தாங்கள் இயற்கை உரம் உற்பத்தி செய்வதாகவும், தங்களுக்கே இந்த குப்பைகள் போதாது என்றும் கூறி குப்பைகளை வழங்கவில்லை. பின்னர் குப்பைகளை வீசுகின்றனர் எனப் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

குப்பைகள் கொட்டுவதற்கு வந்த யாழ்ப்பாண மாநகர சபையின் உழவு இயந்திரங்களும் வழிமறிக்கப்பட்டு வீதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கழிவுகள் கொட்டப்படுவதனை எதிர்த்து போராட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)