கல்முனை மாநகர சபையின் பாதீடு

கிழக்கிலங்கையின் முகவெற்றிலை என வர்ணிக்கப்படும், முக்கியத்துவம் பெற்ற கல்முனை மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு (வரவு செலவுத்திட்டம்) அடுத்த மாதம் முற்பகுதியில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவிருக்கின்றது.

கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றார்.

இதன்படி கல்முனை மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கல்முனை பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான அலுவலகத்தில் தற்சமயம் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பொது மக்கள் அலுவலக நேரத்தில் பார்வையிட்டு தமது கருத்துக்களை இம்மாதம் 30ஆம் திகதி வரை எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியுமென மாநகர மேயர் சட்டத்தரணி றகீப் அறிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான பொது மக்கள் கருத்தறியப்பட்டதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாநகர சபை அமர்வில், சபையினரின் அங்கீகாரத்திற்காக மேயரால் சமர்ப்பிக்கப்பட்டு 2023 வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றறப்படும்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ரஸின் ஆளுகைக்குட்பட்ட கல்முனை மாநகர சபையில், முஸ்லிம் காரங்கிரஸ் தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, சிறீலங்கா சுதந்திரக்கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய காங்கிரஸ் முதலான கட்சிகளின் உறுப்பினர்களும், சுயேச்சை குழு உறுப்பினர்களும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கிழக்கிலுள்ள பல உள்ளுராட்சி மன்றங்கள் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்களைத் தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருவதுடன், எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் தத்தமது சபைகளில் உறுப்பினர்களின் அங்கீகாரம் பெறவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கல்முனை மாநகர சபையின் பாதீடு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY