
posted 22nd November 2022
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு 'அறிவார்ந்த சமூகத்திற்கான வகுப்பு' எனும் தொனிப்பொருளில் கல்முனை பொது நூலகம் ஒழுங்கு செய்திருந்த நூலக தகவல் தேடுகை பொறிமுறை எனும் தலைப்பில் விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று மருதமுனை சமூக வள நிலையத்தில் நடைபெற்றது.
கல்முணை மநகர முதல்வர், ஆணையாளர் மற்றும் பிரதி ஆணையாளர் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை பொது நூலகத்தின் நூலகர் ஏ.சி. அன்வர் சதாத் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் பீ. பிரசாந்தன் வளவாளராகக் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்.
இதில் கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கும் கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை ஆகிய 04 பொது நூலகங்களின் நூலகர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 40 ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)