ஏன் இந்த மேடை நாடக விழா?

சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை கிறீசலிஸ்டன் இணைந்து வட மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நடாத்திய பால்நிலை பாரபட்சமிக்க சமூக நியமனங்களும் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களில் அவற்றின் தாக்கமும் என்ற ஆய்வினூடாக கண்டறியப்பட்ட சமூக நியமங்களை நிலைமாற்றுவதற்காக மக்களுக்கு விழப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'நிலைமாற்றத்திற்கான பயணம்' என்ற மேடை நாடக விழா வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

கதிரொலி கலைக்கூடத்தினரால் 'புவனா' மற்றும் 'விடியல்' செம்முகம் ஆற்றுகைக் குழுவினரால் 'மனச்சிறை' மற்றும் 'சாப்பாட்டு மேசை' ஆகிய மேடை நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

  • யாழ்ப்பாணத்தில் 11.11.2022 அன்று தந்தை செல்வா கலையரங்கிலும்
  • 13.11.2022 அன்று கிளிநொச்சியில் கூட்டுறவு மண்டபத்திலும்
  • முல்லைத்தீவு மாவட்டத்தில் 18.11.2022 அன்று பண்டார வண்ணியன் மாநாட்டு மண்டபத்திலும்
  • மன்னாரில் 19.11.2022 அன்று நகர சபை மண்டபத்திலும்
  • வவுனியாவில் 20.11.2022 நகர சபை மண்டபத்திலும் இவ் நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

எதற்காக இந்த நாடகங்கள் உங்களுக்கு காட்சியளிக்கப்படுகின்றது என்பதை சட்ட மற்றும் சமூக நம்பிக்கை அமைப்பின் செல்வி அனுஷா காயத்திரி இந் நிகழ்வின்போது விளக்கமளிக்கையில்;

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வட மாகாணத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ரான்ஸ்வோம் என்னும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சட்ட மற்றும் சமூக நம்பிக்கை என்ற அமைப்பு கிறிசலிஸீடன் இணைந்து இத் திட்டத்தை முன்னெடுத்தோம்.

இந்த ரான்ஸ்வோம் என்ற அமைப்பு ஒரு ஆய்வை மேற்கொண்டது. இவ் ஆய்வில் வடக்கில் நிலவுகின்ற பாலியல் பாரபட்சமிக்க சமூக நியமங்கள் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அவர்கள் அடைந்து கொள்வதில் எவ்வித தாக்கத்தை செலுத்துகின்றது என்பதை கண்டறிவதற்காகவே இவ் அய்வு நடாத்தப்பட்டது.

இவ் ஆய்வு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி இங்குள்ள மக்களின் கருத்துக்களை உள்வாங்கியே இவ் ஆய்வு நடாத்தப்ட்டது.

பல தரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களிடம் பல தரப்பட்ட கேள்விகளுடனும் அவர்களின் கருத்துக்களையும் கலந்துரையாடலின் மூலமாகவும் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ் ஆய்வுகள் இந்த வருடத்தின் (2022) ஆரம்பத்திலே நிறைவு செய்யப்பட்டு அனைத்து ஆய்வுகளும் ஒன்று இணைக்கப்பட்டு அவை நூலாகவும் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இப் புத்தகம் உங்கள் வாசிகசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம் நமது நாட்டில் நாம் உரிமைகளுக்கும், சுதந்திரத்துக்கும் உரித்தானவர்கள்.

எங்கள் அரசியல் யாப்பில் இவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையிலுள்ள பாரம்பரிய சில பெண்களை பாரபட்சத்துக்கு உள்ளாக்கி அவர்களை வீட்டுக்குள்ளே அடைத்து வைக்கப்பட்டுள்ள சில நியமங்கள் சமூகத்தில் நிலவுகின்றது.

கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இது ஆண்களால் அல்ல. இது பெண்களாலேயே சமூக மட்டத்தில் பரப்பப்பட்டு வருகின்றது.

எங்கள் ஆய்வின் முடிவானது பிரதானமாக பத்து சமூக நியமங்கள் வடக்கில் இன்றும் அதிகமாக நிலவுகின்றது என அடையாளப்படுத்தியுள்ளோம்.

இவைகள் பெண்கள் வீட்டு வேலை செய்யவும் , பிள்ளைகளை கவனிக்கவும் , தங்கள் கணவனை கவனிக்கவும் , பெண்கள் கற்பு என்ற நிலையில் கட்டிப் போடப்பட்டவர்களாகவும் , கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது , குடும்பத்தின் கௌரவம் பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற நிலையில் பெண்களை உரிமைகளற்ற நியமனங்களாக இருக்கின்றது.

ஆகவேதான் இவைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறான மேடை நாடகங்கள் ஊடாக முனைவுகளை மேற்கொண்டுள்ளோம் என இவ்வாறு தெரிவித்தார்.

ஏன் இந்த மேடை நாடக விழா?

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)