
posted 27th November 2022
இந் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு சகல இன மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதான அரசியல் தீர்வை முன்வைத்து அரசியல் சுதந்திரம் நிலைநாட்டப்படுமாயின் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினை இல்லாமலாகிவிடும். அத்துடன் புலம்பெயர் தேசத்தில் வாழும் உறவுகள் முண்டியடித்துக் கொண்டு இங்கு வந்து முதலீடுகளைச் செய்யுயும் சூழல் உருவாகும்.
இவ்வாறு முன்னாள் பிரதி அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டு. மாவட்ட தலைவருமான சோ. கணோசமூர்த்தி குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கான புதிய அலுவலகத்தில் வைத்து கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கூறிய விடயங்கள் பற்றி முன்னாள் பிரதி அமைச்சர் சோ. கணேசமூர்த்தி மேலும் குறிப்பிடுகையில்;
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆளும் கட்சி கொண்டுவரும் தீர்மானங்களை எதிர்க் கட்சிகள் எதிர்ப்பதும், எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் தீர்மானங்களை ஆளும் கட்சி எதிர்ப்பதுமான அரசியல் சூதாட்டம் கடந்த எழுபத்து நான்கு வருடங்களாக இருந்து வந்த நிலையில் இன்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்திற்கு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய கட்சிகளும் உடன்பட்டுள்ளன.
இந்த வாய்ப்பை தமிழ்த் தரப்பு சாதகமாக்கி கொள்ள வேண்டும். அத்துடன் ஜனாதிபதி உள்நோக்கம் எதுவுமின்றி இதய சுத்தியுடன் செயற்பட்டால் இந்நாட்டில் ஏன்பட்டுள்ள சகலவிதமான பிரச்சினைகளும் தீர்ந்து இத் தேசம் சுபீட்சமடையும் நாள் வெகு தொலைவில் இல்லை இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பரிபூரண ஆதரவு உண்டு.
எமது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ என்னுடன் கலந்துரையாடும் போதும், எமது கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதும் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்திற்கு பூரண ஆதரவு வழங்குவேன் என்றும், பதின்மூன்று பிளஸ் அல்லது சந்திரிகா அம்மையாரின் தீர்வுப் பொதி எதுவாகினும் தனது ஆதரவை வழங்கி சகல இனமக்களும் நிம்மதியாக வாழும் சூழலை தோற்றுவிப்தற்கு தான் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY