
posted 4th November 2022
வரலாற்றுச் சிறப்புமிக்க சிதுல்பௌவ விகாராதிபதி அதிவணக்கத்துக்குரிய மாத்தராம்ப ஹேமராதன நாயக தேரர் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பு சுற்றாடல் அமைச்சில் நடைபெற்றது. இதன்போது,விகாரையின் விஸ்தரிப்பு, புனருத்தாபனம் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் விகாராதிபதி அமைச்சருக்கு எடுத்துரைத்தார். வருடாந்தம் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விகாரையில் வழிபாட்டுக்காக வருகின்றனர். காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்த விகாரையை விஸ்தரிப்பதற்கான தேவைகுறித்தும் விகாராதிபதி அமைச்சருக்கு எடுத்துரைத்தார்.
இதற்கான அனுமதியை சுற்றாடல் அமைச்சு வழங்க வேண்டியுள்ளதால், ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அவர் வேண்டிக் கொண்டார். விகாராதிபதியின் விடயங்களை கருத்திலெடுத்த அமைச்சர் இதற்கான அனுமதியை தருவதாகவும் உறுதியளித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)