அனர்த்த விழிப்புணர்வுக்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியம். அரசாங்க அதிபர்

காலங்கள் மாற்றத்தால் அனர்த்தங்கள் ஏற்படும் அபாயங்கள் தோன்றி வருகின்றன. ஆகவே இவ் அனர்த்தங்கிலிருந்து மக்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வாகவும் இருந்து கொள்ள ஊடகங்களின் உதவி எமக்கு அவசியம் தேவைப்படுகின்றது. என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.

'வேல்ட் விஷன்' நிறுவனத்தின் அனுசரனையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு 'அனர்த்த தகவல் தொடர்புகளில் வெகுஜன ஊடகங்களின் பங்கு' என்ற தலைப்பில் பயிற்சி பாசறை இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் திலீபன் தலைமையில் வியாழக்கிழமை (03.11.2022) நடைபெற்ற இவ் பயிற்சி பாசறைக்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் . வளவாளர்களாக மன்னார் , வவுனியா நீர்பாசன பணிப்பாளர் நடராஜா யோகராஜா மற்றும் மன்னார் கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் உத்தியோகத்தர் பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் பயிச்சி பாசறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில்

எதிர்வரும் காலத்தில் அனர்த்தங்கள் ஏற்படலாம் என நாம் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றோம். ஆகவே இவ் அனர்த்தம் வருவதற்கு முன் இவ்விடயம் மக்களுக்கு எவ்வாறு உடன் தெரிவித்துக் கொண்டு அவர்களின் பாதுகாப்புகளுக்கு இட்டுச் செல்வதற்கு ஊடகவியலாளர்களின் உதவி எங்களுக்கு மிக அவசியமாக தேவைப்படுகின்றது.

இந்த பயிற்சி பட்டறையானது நாங்கள் எதிர்நோக்க இருக்கின்ற அனர்த்தத்திலிருந்து எவ்வாறு மக்களை பாதுகாக்கலாம் அதற்கு எவ்வாறு ஊடகங்கள் உதவி செய்யலாம் என்பதைப்பற்றியே இவ் பயிற்சி பட்டறை இடம்பெறுகின்றது.

அனர்த்தம் தவிர்க்க முடியாதது. அதாவது சுனாமி வரப்போகிறது அல்லது சூறாவளி வரப்போகிறது என்று சொல்லலாம். நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லலாம். ஆனால் சுனாமியை சூறாவளியை தடுக்க முடியாது.

அவ்வாறு அடை மழை பெய்யப் போகின்றது நாம் மக்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அடை மழையை தடுக்க முடியாது.

அனர்த்த அபாய குறைப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் பொது மக்களை இவ் அனர்த்தத்திலிருந்து எவ்வாறு மீட்கலாம் என நாம் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

'வேல்ட் விஷன்' நீண்ட காலமாக குறிப்பாக இருபது வருடங்களாக மன்னார் மாவட்டத்தில் சேவை செய்து கொண்டிருக்கும் ஒரு நிறுவனம். இந்த பயிற்சி பட்டறைக்கும் இந்த நிறுவனமே உதவி செய்கின்றது. மன்னாரில் மக்களுக்கு செய்யும் பணிக்காக இவ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து நிற்கின்றேன்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் ஊடகவியலாளர் நீங்களும் சிறந்த முறையில் உங்கள் பணியை நன்கு செய்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

எதிர்வரும் காலத்தில் அனர்த்தங்கள் ஏற்படலாம் என நாம் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றோம். ஆகவே இவ் அனர்த்தம் வருவதற்கு முன் இவ்விடயம் மக்களுக்கு எவ்வாறு உடன் தெரிவித்துக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து ஊடகவியலாளர்களின் உதவி எங்களுக்கு மிக அவசியமாக தேவைப்படுகின்றது.

அத்துடன் மக்களுக்கு காலத்துக்கு காலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு ஊடகங்களின் உதவி அவசியம் தேவையானது.

சில சமயம் ஊடகங்கள் தவறான கருத்துக்களை வெளியீடு செய்யும்போது மக்கள் பதட்டமடையும் நிலையும் ஏற்படுத்துகின்றது. ஆகவே ஊடகவியலாளர்களாகிய உங்களுக்கு தகவல் ஒன்று கிடைத்து விட்டால் உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மக்களுக்கு சரியான தகவலை வழங்கும் பொறுப்பு ஊடகவியலாளர்களாகிய உங்களுக்கு உண்டு.

மன்னாரைப் பொறுத்தமட்டில் வெள்ளப் பெருக்கும் கடலால் ஏற்படும் பிரச்சனைகளே எமக்கு அதிகம்.; கடலால் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எவ்வாறு கையாளுவது என கடந்த வாரம் கடலோர பாதுகாப்பு திணைக்களம் எமக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

எங்களைவிட ஊடகவியலாளர்களுக்கே முதலில் தகவல் கிடைக்கப் பெறுகின்றது. ஆகவே எந்தவிடயமாக இருந்தாலும் முதலில் அவற்றை செய்தியாக்குவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல்பட்டு உண்மை நிலையைப் பெற்று சரியான செய்தி பரிமாற்றமாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேயே இவ் பயிற்சி பாசறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே ஊடகவியலாளர் ஆகிய நீங்கள் உங்கள் பணியை சிறந்த முறையில் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உண்மை நிலை மற்றும் மக்கள் மத்தியில் நல்லதொரு விழப்புணர்வை ஏற்படுத்தவும் செயல்பட இவ் பயிற்சி பட்டறை உதவிபுரியும் என நினைக்கின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.

அனர்த்த விழிப்புணர்வுக்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியம். அரசாங்க அதிபர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)