அதிகரிக்கும் நீரிழிவு நோயாளர்கள்

வடக்கு மாகாணத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 15 வீதமானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். போதனா மருத்துவமனை எச்சரித்துள்ளது.

யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் இதுவரை 3000இற்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளர்கள் புதிதாக சிகிச்சை பெற்றுள்ளனர் என்று நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட மருத்துவ நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் நீரிழிவு நோய் தாக்கம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் மிக அண்மைய தரவுகளின்படி கொழும்பில் - மேல் மாகாணத்தில் 30 வீதமானவர்களுக்கு இந்த நோய் தாக்கம் உள்ளது. யாழ்ப்பாணத்தில் 15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய்க்கு இலக்காகியுள்ளனர். இந்த நோய் தொடர்பான ஆய்வுகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கோவிட் தொற்றுக் காலப்பகுதியில் 20 - 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3000இற்கும் மேற்பட்டவர்கள் புதிய நோயாளர்களாக பதிவாகியுள்ளனர். நீரிழிவு நோயின் தாக்கம் சிறிதுசிறிதாக அதிகரிக்கிறது.

நவம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் நீரிழிவு விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல விழிப்புணர்வு செயல் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. பாடசாலை, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானது. ஏனெனில், இளையோர் மத்தியிலேயே நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம். குறிப்பாக, தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி அற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம், நித்திரை குறைவு, போன்ற காரணங்கள் நீரிழிவு ஏற்பட காரணமாகின்றன. நீரிழிவு நோய் ஏற்படும்போதான அறிகுறிகளை அடையாளம் கண்டால் உடன் உரிய சிகிச்சை பெற்றால் பாரதூரமான தாக்கத்திலிருந்து தப்ப முடியும்.

வடக்கு மக்கள் நீரிழிவு நோய் தொடர்பில் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம் என்றார்.

அதிகரிக்கும் நீரிழிவு நோயாளர்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY