அடிக்கல் நாட்டுவிழா

பட்டிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள கணித ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் ப. சுகிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி. என். புள்ளநாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், கணித ஆய்வு கூடதிற்கான அடிக்கல்லையும் வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.

விழாவில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) எஸ். மகேந்திரகுமார், கோட்டக்ககல்விப் பணிப்பாளர் ரி. அருள் ராசா உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மேலும் விழாவில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு பாடசாலை அதிபர் சுகிதரன் தலைமையில் பாடசாலை சமூகத்தினர் பெருவரவேற்பு அளித்ததுடன், மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி. புள்ளநாயகம் ஆற்றிவரும் பெரும் சேவைகளைப் பாராட்டி கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி. புள்ளநாயகம் இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் உரையாற்றுகையில்,

இத்தகைய பிரதேசங்களில் மாணவர்களது கல்வி நிலை உயர்வுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அதிபர், ஆசிரியர்களின் பணிவிதந்து பாராட்டத்தக்கதாகும்.

அதேவேளை மாணவர் கல்வியில் பெற்றோரும் அக்கறை கொண்டவர்களாகத் திகழவேண்டும் அத்துடன் மாணவர்களது முயற்சியும், ஊக்கமும் முக்கியமாகும்” எனக்கூறினார்.

அடிக்கல் நாட்டுவிழா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)