
posted 4th November 2022
அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரிவிதிப்பு தொடர்பில் இது சரியா என நீதிபதிகள் நீதியரசர்களிடம் கேட்க நிலை உருவாகியுள்ளதாக நீதியரசர் பாராளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் உடுவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் அரசாங்கம் புதிய வரி விதிப்பு தொடர்பில் அறிவிப்பை விடுத்துள்ளது.
புதிய வரி விதிப்பால் மக்கள் இடர்களை எதிர் நோக்குகிறார்கள் என தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நீதிபதிகள் தமக்கும் குறித்த வரி விதிப்பால் பாதிப்பு ஏற்பாடுமோ என நினைத்து நீதியரசர்களிடம் இது சரியா என கேட்கிறார்கள்.
நீதியரசர்கள் குறித்த வழக்குத் தொடர்பில் விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் தீர்ப்பு தொடர்பில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அரசாங்கம் மக்களின் உள்ளூர் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக வரி விதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
மக்கள் இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து செலவுகளை எவ்வாறு குறைக்கலாம் என சிந்தித்து செயற்பட வேண்டும்.
ஆகவே தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு அரசியலில் ஒற்றுமையும் சமூகத்தில் பகிர்ந்து கொள்ளுதலுப் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)