லண்டனில் தொடரும் போக்குவரத்தின் வேலை நிறுத்தம்

லண்டனில் 10ஆம் திகதி நவம்பர் மாதம் ஆரம்பமான ரான்ஸ்போட் போ லண்டன் (TFL) வேலை நிறுத்தம் முடிவுற்று மூன்று கிழமைகள் முடியும் தருவாயில், பஸ் வண்டிகளின் வேலை நிறுத்தமானது ஆரம்பமாகின்றது.

டிசம்பர் மாதத் தொடக்க நாளாகிய வியாழக்கிழமை 1ஆம் திகதியிலிருந்து குறிப்பிட்ட பல பஸ் மார்க்கங்கள் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படவுள்ளது.

ஆனால், இவ் வேலை நிறுத்தமானது, பூரணமான வேலை நிறுத்தமாகத் தோன்றினாலும், பயணிகளின் அசௌகரியத்தைக் குறைக்கு முகமாக மாற்று பஸ்களின் ஏற்பாட்டை பஸ் கொம்பனிகள் செய்துள்ளன. இதனால், சேவைகள் மட்டிப்படுத்தப்பட்ட வேலே நிறுத்தமாகவே இதனைக் கருதமுடியும். இவ்வாறுள்ள இவ் வேலை நிறுத்தம் ஒரு சில அசௌகரியத்தினை மக்களுக்குத் தந்தாலும் அதனால் பயணிகளுக்கு அதிகளவு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கமென்பதனையும் ஊகிக்கக்கூடியதாக உள்ளது.

வேலை நிறுத்தத் தினங்களாவன;

1ஆவது கட்டமாக

  • வியாழக் கிழமை, 01.12.2022
  • வெள்ளிக் கிழமை, 02.12.2022
  • சனிக் கிழமை, 03.12.2022

2ஆவது கட்டமாக

  • வியாழக் கிழமை, 08.12.2022
  • வெள்ளிக் கிழமை, 09.12.2022
  • சனிக் கிழமை, 10.12.2022


3ஆவது கட்டமாக

  • வியாழக் கிழமை, 15.12.2022
  • வெள்ளிக் கிழமை, 16.12.2022
  • சனிக் கிழமை, 17.12.2022


மேலும் விபரங்களை அறிய இவ்விணையத் தளத்தைக் கிளிக் செய்யுங்கள் >>>> Transport for London