யாழில் அதிகரிக்கும் டெங்கு பரவல்

யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் இன்று டெங்கு நோய் பரவல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இன்றைய தினம் தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுவ தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரையான காலபகுதியில் 2774 வரையானோர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றுவரை இந்த வருடத்தில் 8 டெங்கு நோய் இறப்புக்கள் பதிவாகியுள்ளது. ஆகவே நாங்கள் பொது மக்களை கேட்டுக்கொள்வது யாதெனில் கட்டுப்படுத்தி எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என கேட்டு நிற்கின்றோம் அவர் மேலும் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டிலே 2530 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு ஆண்டில் 2021 ஆம் ஆண்டிலே 301 நோயாளர்களும் இணங்காணப்பட்டிருந்தார்கள். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து மாத ரீதியாக பார்க்கின்ற பொழுது ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து மே, ஜூன் மாதமளவில் ஒரு அதிகரித்த பரம்பல் காணப்பட்டது. பின்பு குறைவான நிலை காணப்பட்டு கடந்த ஒக்ரோபர் மாதம் முதல் மீண்டும் டெங்கு நுளம்பானது அதிகரித்து செல்வதை நாங்கள் அவதானிக்க கூடியதாக உள்ளது.

யாழில் அதிகரிக்கும் டெங்கு பரவல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY