
posted 11th November 2022
நெடுந்தீவைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் நாகேந்திரர் இலட்சுமணராசா வியாழக்கிழமை (10) காலமானார்.
ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட அவர் 'நெடுந்தீவு லக்ஸ்மன்' என்றே அறியப்பட்டார்.
நாகேந்திரர் இலட்சுமணராசா நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்டவர். 'உயிர்மூச்சு', 'சிரிக்கும் பூக்கள்', 'மாறும் திசைகள்', 'நிஜங்களின் நிழல்கள்' என்ற நூல்கள் மூலம் பெரிதும் அறியப்பட்டார்.
தொல்பொருள் திணைக்களத்தின் ஓய்வுநிலை உத்தியோகத்தரான அவர், யாழ்ப்பாணத்தில் வெளியான - வெளியாகும் பத்திரிகைகளின் சுயாதீன செய்தியாளராகவும் செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)