
posted 9th November 2022
சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளர்களுடன், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் முதலாவது ஒருங்கிணைப்புக்கூட்டம், கொழும்பில் நடைபெறவிருக்கின்றது.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் ஜனாபா. புர்கான் பி. இப்திகார் தலைமையில், எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மருதானை அஷ்ஷபாப் கேட்போர் கூடத்தில் இந்த முக்கிய கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தகவல் அறியும் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான எம்.பீ.எம். பைரூஸ் விசேட உரையாற்றுவார்.
சிறீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான நிறைவேற்றுக் குழுவின் மாவட்ட இணைப்பாளர்கள் இந்த முதலாவது ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு தவறாது சமூகம் தருமாறு அழைக்கப்பட்டுள்ளதுடன், கலந்து கொள்ளும் மாவட்ட இணைப்பாளர்கள், தத்தமது மாவட்டங்களில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்களையும் மேற்படி கூட்டத்தின்போது உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்குமாறும் போரத்தின் உப செயலாளர் ஸாதிக் ஷிஹான் கோரியுள்ளார்.
முக்கியத்துவமிக்க இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் மீடியா போரத்தின் முதன்மை ஆலோசகரும், முன்னாள் தலைவருமான அல்-ஹாஜ் என்.எம்.அமீன் உட்பட நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)