
posted 18th November 2022
கணவனும் மனைவியும் வேலைத் தளங்களுக்கு செல்லும் நிலையால் வீட்டில் இருக்கும் முதியோர் கவனிக்கப்படாத நிலை
அருட்பணி றெஜினோல்ட் ஈஸ்பரன் அடிகளார்
முன்பு கூட்டு குடும்பம் என்ற காலம் இருந்தது. ஆனால் இப்பொழுது கணவனும் மனைவியும் வேலைத் தளங்களுக்கு செல்லும் நிலையால் வீட்டில் இருக்கும் முதியோர் கவனிக்கப்படாத நிலை தோன்றியுள்ளதை கவனத்தில் எடுத்துக்கொண்ட மெதடிஸ்த திருச்சபை மன்னாரிலும் இவர்களுக்கான திட்டத்தை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது என முல்லைத்தீவு மெதடிஸ்த திருச்சபையின் முகாமைகுழு அருட்பணி றெஜினோல்ட் ஈஸ்பரன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
வயோதிபர், மாற்றாற்றல் கொண்டவர்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் நலன் நோக்கி 'டெல்வ் லிங்' செயல் திட்டங்களை மெதடிஸ்த திருச்சபையால் மன்னாரிலும் ஆரம்பிக்கும் நோக்குடன் இது தொடர்பாக வியாழக்கிழமை (17.11.2022) நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அருட்பணி றெஜினோல்ட் ஈஸ்பரன் அடிகளார் தெரிவிக்கையில்;
பெற்றோரால் மாற்றாற்றல் உள்ள பிள்ளைகள் வெளியே வரமுடியாத நிலையில் மனசஞ்சலத்துடன் இருக்கும் இவ் காலகட்டங்களில் இவர்களும் முதியோரையும் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வாழ்விழந்தோர். நலன் கருதியும் கவனத்தில் எடுத்துக் கொண்ட மெதடிஸ்த திருச்சபையானது இவர்களுக்கான உதவிகரம் நீட்டும் பணிகளை தற்பொழுது மன்னார் மாவட்டத்திலும் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.
மெதடிஸ்த திருச்சபையின் இலங்கைக்கான பேராயர் மேதகு டபிள்யூ.பி.எபநேச யோசப் ஆண்டகையின் தலைமைத்துவத்தில் இவ் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இவ் திட்டத்துக்கு அருட்பணி அன்ரனி சதீஸ் அடிகளார் பிரதான இணைப்பாளராக இருந்து செயல்படுத்துகின்றார்.
இவ் திட்டத்தை முன்னெடுப்பதற்காக அனுராதபுரம் மற்றும் மன்னாருக்கான பிரதான இணைப்பாளராக செல்வி. ஜெகபியூலா nஐயகுணரூபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மெதடிஸ்த திருச்சபையானது தற்பொழுது முன்னெடுத்துள்ள சிறப்பு பணியாக முதியோர் மட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே இவ் திட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்பு கூட்டு குடும்பம் என்ற காலம் இருந்தது. ஆனால் இப்பொழுது கணவனும் மனைவியும் வேலைத் தளங்களுக்கு செல்லும் நிலையால் வீட்டில் இருக்கும் முதியோர் கவனிக்கப்படாத நிலை தோன்றியுள்ளது.
பலர் தாங்கள் வயயோதிபம் அடைவதற்கு முன்பு இருந்த அனுபவங்களைக் கூட மற்றவர்களுடன் பகிர முடியாத நிலையில் வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
இன்று முதியோரின் அனுபவங்களை இன்றைய இளையோர் கேட்டுக் கொள்ளாத நிலையும்
குடும்பங்களில் யாவரும் வேலைத் தளங்கள் என வீட்டைவிட்டு வெளியேறியதுடன் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையும்
அடுத்து இவர்களை வெளியே கொண்டு வந்து இவர்களின் கடந்த கால ஆற்றல்களை தெரிந்து கொள்ளாத நிலையில் இவைகள் மங்கி போகும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இவற்றெல்லாம் கவனத்தில் எடுத்தே மெதடிஸ்த திருச்சபையானது அவர்களின் குடும்பம் மற்றும் எங்கள் நிறுவனத்தின் மூலம் முதியோரை பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.
அவர்களின் அனுபவங்களை பெற்று நல்லதை இன்றைய சமூகத்துக்கு எண்பித்தல் போன்ற திட்டங்களைக் கொண்டே இவ் மெதடிஸ்த திருச்சபை முன்னெடுப்புக்களை ஆய்த்தம் செய்துள்ளது.
சமூகத்தில் பலதரப்பட்ட பலவிதமான பணிகள் இடம்பெறுகின்றது. இருந்தும் மாற்றாற்றல் மத்தியிலும் முதியோர் மத்தியிலும் இவ் பணிகள் மிக குறைவாக காணப்படுவதால்தான் நாங்கள் இவ் பணியை மிக நிதானத்தடன் எடுத்துள்ளோம்.
மாற்றாற்றல் உள்ளவர்களை பொறுத்தமட்டில் இவர்களின் திறமைகளை இனம் காணப்பட்டு அது கல்வியாக இருக்கலாம் அல்லது வேலைவாய்ப்புக்கள் கைத்தொழில்களாக இருக்கலாம் இவர்களை சமூகத்தில் மட்டில் ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதே எமது திட்டங்களாக இருக்கின்றது.
இன்று முதியோரை வீட்டுக்குள் முடக்கியவர்களாக முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு இருக்கும் இந்த நிலையை மாற்றி அமைத்து அவர்கள் உள ரீதியாக பாதிப்பு அடையாத வண்ணம் இவர்களையும் சமூகத்தின் மத்தியில் அவர்களின் அனுபவங்களை ஏனையவர்கள் பெற்றுக் கொள்ளும் திட்டமாகவும அமைத்துள்ளோம் என இவ்வாறு தெரிவித்தார்.
'டெல்வ் லிங்' என்ற நிறுவனத்தின் செயல் திட்டங்கள்
மெதடிஸ்த திருச்சபையால் வயோதிபர் , மாற்றாற்றல் கொண்டவர்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் நலன் நோக்கி 'டெல்வ் லிங்' எ;ற நிறுவனத்தின் மூலம் செயல் திட்டங்களை மன்னாரிலும் ஆரம்பிக்கும் நோக்குடன் இது தொடர்பாக வியாழக்கிழமை (17.11.2022) மன்னார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர் மகாநாடு ஒன்று இடம்பெற்றது.
இவ் நிறுவனம் மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவு தெரிவு செய்திருப்பதால் இங்கு மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டங்களை தெளிவுப்படுத்தினர்.
இவ் நிறுவனத்தின் மன்னார் கிளை இணைப்பாளர் எவ்.ஏ.நிமால் தலைமையில் நடைபெற்ற இவ் செய்தியாளர் மகாநாட்டில் மன்னார் மாவட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்
இவ் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் சி. டிலக்ஷன் , முல்லைத்தீவு மெதடிஸ்த திருச்சபை முகாமைக்குழு அருட்பணி றெஜினோல்ட் ஈஸ்பரன் அடிகளார் , அனுராதபுரம் மன்னார் 'டெல்வ் லிங்' நிறுவன இணைப்பாளர் , மாந்தை மேற்கு பிரதேச செயலக கிராம அலுவலகர் நிர்வாக அதிகாரி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)