
posted 29th November 2022
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் இராணவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது இது மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 40 கிலோ மதிக்கத்தக்க 20 பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர், பொலிசாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)