மாவீரர்களுக்கு வல்வெட்டித்துறை கடலில் அஞ்சலி

மாவீரர் நாளான நேற்று (27) இரவு ஞாயிறு வல்வெட்டித்துறை ரேவடி கடலில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் முதல் கடல் தற்கொலையாளி மேஜர் காந்தரூபன் அவர்களது தந்தையார் முருகுப்பிள்ளை யோகராசா சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி செயலாளர் நாயகம் எம் கே சிவாஜிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மாவீரர்களுக்கு வல்வெட்டித்துறை கடலில் அஞ்சலி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)