மரம் நடுகை திட்டத்தை முன்னிட்டு வெற்றிலைக்கேணி பாடசாலையில் மரம் நடுகை விழா

வடக்கு மாகாண மரம் நடுகை திட்டத்தை முன்னிட்டு புளூஸ் அபிவிருத்தி அறக்கட்டளை நிறுவன அனுசரணையில் வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தால் மரம் நடுகை விழா இன்று காலை 10:39 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளது.

யா. வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் த. செல்வக்குமார் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமராட்சி வலயக் கல்விப்பணி்ப்பாளர் க. சத்தியபாலன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நாட்டி வைத்ததுடன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தென்னை உட்பட மரக்கன்றுகளை வழக்கிவைத்து கருத்துரையும் வழங்கினார்.

இதில் பாடசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதில் சிறப்பு விருந்துனராக முன்னாளர் பாடசாலை அதிபரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஆநந்தராசா கலந்து கொண்டார்.

இன்றைய இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்,பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மரம் நடுகை திட்டத்தை முன்னிட்டு வெற்றிலைக்கேணி பாடசாலையில் மரம் நடுகை விழா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)