மன்னார் மறைசாட்சிகளின் சாட்சிய வாழ்வு 'வித்துக்கள்' என்ற பெயரில் திரைபடமாகியுள்ளது.

மன்னார் மறைமாவட்டம் வாழ் மாணவர்கள் , இளைஞர்கள் ,யுவதிகள் , பெரியவர்களின் விசுவாசத்துக்கு வலுசேர்க்கும் நோக்குடன் மன்னார் மறைசாட்சிகளின் சாட்சிய வாழ்வு 'வித்துக்கள்' என்ற பெயரில் திரைபடமாகியுள்ளது. புனித பணியில் நாம் ஒன்றிணைவோம் என மன்னார் கலையருவி இயக்குனர் அருட்பணி ம.செல்வநாதன் பீரிஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பங்குத்தந்தையர்களுக்கும் பாடசாலை அதிபர்களுக்கும் மன்னார் கலையருவி இயக்குனர் அருட்பணி ம.செல்வநாதன் பீரிஸ் அடிகளார் அனுப்பியுள்ள கடிதத்தில்

மன்னார் மறைசாட்சிகளின் சாட்சிய வாழ்வை பிரதிபலிப்பதாக 'வித்துக்கள்' திரைப்படமானது இலங்கையிலும் எமது மறைமாவட்டத்திலும் எமது மறைமாவட்ட கலைஞர்களால் நடித்து திரையிடப்பட்டுள்ளது.

எமது மறைமாவட்டம் வாழ் மாணவர்கள் , இளைஞர்கள் ,யுவதிகள் , பெரியவர்களின் விசுவாசத்துக்கு வலுசேர்க்கும் நோக்குடன் இத்திரைப்படமானது திரையிடப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு அறியத்தருகின்றேன்.

ஆகவே பாடசாலை சமூகமாகவோ அல்லது மறைக்கல்வி மாணவர் சமூகமாகவோ இளைஞர் குழுக்களாகவோ இணைந்து அருட்பணியாளர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் என இணைந்து சென்று பார்வையிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றேன்.

இதற்கு சகல வழிகளிலும் நாம் உதவியாக இருப்போம். ஆகவே தங்கள் பாடசாலை , பங்கு , ஆணைக்குழுக்கள் மூலமாக இறைசமூகத்தினரை ஒழுங்கமைப்பு செய்து எமக்கு தெரியப்படுத்தினால்; அதற்கான சகல ஆய்த்தங்களையும் செய்து தரப்படும் எனவும்

எனவே எம் விசுவாசத்துக்கு வலுசேர்க்கும் இப் புனித பணியில் நாம் ஒன்றிணைவோம் என மன்னார் கலையருவி இயக்குனர் அருட்பணி ம.செல்வநாதன் பீரிஸ் அடிகளார் மன்னார் மறைமாவட்ட பங்குத்தந்தையர்களுக்கும் பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ் திரைப்படம் பாடசாலை மாணவர்கள் காலை 8.30 மணிக்கும் இவர்களுக்கான கட்டணம் 250 ரூபா எனவும்

பெரியவர்களுக்கு மாலை 3.30 மணிக்கும் கட்டணம் 300 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மறைசாட்சிகளின் சாட்சிய வாழ்வு 'வித்துக்கள்' என்ற பெயரில் திரைபடமாகியுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)