மன்னாரில் 'மன்னெழில்'மலர் வெளியீடும் கலைஞர் , ஊடகவியலாளர் கௌரவிப்பும்

மன்னார் மாவட்ட செயலகமும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரனையில் நடாத்திய விழாவில் 'மன்னெழில் -11' மலர் வெளியீடும் 2022ம் ஆண்டுக்கான கலைஞர் மற்றும் ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு விழாவும் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் 16.11.2022 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மன்னார் மாவட்ட கலை , பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான திருவாட்டி அ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் நகரில் மத்தியிலுள்ள பிரதான வீதி ரவுண்ட போட்டிலிருந்து பிரதம அதிதிகள் மாவட்ட செயலக வளாகத்துக்குள் அழைத்துவரப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் அமரர் பீ.ஏ.அந்தோனி மார்க் அரங்கில் மன்னார் மாவட்ட செயலாளர் உட்பட இதில் கலந்து கொண்ட அதிதிகளால் 'மன்னெழில்' என்ற மலர் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

நடனங்கள் , 'கம்பனில் பெண்மை' சிறப்புரையும் , களைஞர்களுக்கு 'மன்.கலைச்சுரபி' , 'மன்.கலைத்தென்றல்' மற்றும் 'மன்.இளம் கலைச்சுரபி' என்ற விருதுகளும் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் மன்னார் மாவட்டத்தின் கலை , பண்பாட்டு வளர்ச்சிக்கு ஊடகத்துறை மூலமாக தமது அர்ப்பணிமிக்கபணியாற்றி வருவதையிட்டு இவர்களுக்கு 'செய்திச் செம்மல்' என்ற பட்டச் சான்றிதழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண கல்வி , பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.இ.வரதீஸ்வரன் , சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருவாட்டி ராஐமல்லிகை சிவசுந்தரசர்மா மற்றும் கௌரவ விருந்தினராக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் திருவாட்டி லிங்கேஸ்வரி துணைவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரiவின் விருதுகள் பெற்றோர்.

மன்னார் மாவட்ட செயலகமும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரனையில் புதன்கிழமை (16.11.2022) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடாத்திய விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெற்றவர்கள்

முசலி பிரதேச செயலகப் பிரிவில்

  • திரு.றெமோண்டோ செல்வராஜ் குலாஸ் (மன்.இளம் கலைச்சுரபி)
  • ஜனாப்..ஹாமித் முஹம்மது சுஹைப். (மன்.கலைத் தென்றல்)
  • ஜனாப். ஜமால்தீன் முகம்மது முத்தலிபாவா (மன்.கலைச் சுரபி)

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில்

  • செல்வன். மே.பி.ஆன் ரொசேன் செரூபா பீரிஸ். (மன்.இளம் கலைச் சுரபி)
  • திரு. ப.சந்தியோகு (மன்.கலைத் தென்றல்)
  • திரு. பிலிப்பு செபஸ்தியாம்பிள்ளை. (மன்.கலைச் சுரபி)

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில்

  • திரு. சிமியோன் பெலிக்ஸ் ஜெனிவர் (மன்.இளம் கலைச் சுரபி)
  • ஜனாப். முகம்மது இமாம் ஹன்பல் (மன்.கலைத் தென்றல்)
  • திரு. சந்தியாப்பிள்ளை அருளானந்தம் (மன்.கலைச் சுரபி)

மடு பிரதேச செயலகப் பிரிவில்

  • திரு.கிறிஸ்தோகு பெனடிக்ற் (மன்.இளம் கலைச் சுரபி)
  • திரு. அலெக்ஸ் முடியப்பர் (மன்.கலைத் தென்றல்)
  • ஜனாப். க.முஹமட் ஹீசைன் (மன்.கலைச் சுரபி)

மன்னார் நகரம் செயலகப் பிரிவில்

  • திரு. யோசேப் இராசநாயகம் மயூரன் (மன்.இளம் கலைச் சுரபி)
  • திரு. அந்தோனிப்பிள்ளை நிசாந்தன் (மன்.கலைத் தென்றல்)
  • திரு. கிறிசாந்து டேவிற் குரூஸ் (மன்.கலைச் சுரபி)

ஆகியோரே விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.