மனித எச்சங்ள்  பகுப்பாய்வுக்கு மன்னார் நீதிமன்றம் அனுமதி

அமெரிக்கா புலோரிடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக கொண்டு செல்வதற்கு மாதிரி தெரிவு செய்வதற்கான கட்டளை ஆக்கப்பட்டிருந்த நிலையில் அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் மேற்பார்வை செய்து அதற்கான மாதிரிகளை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன் பாரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக இதன் அனுமதிக்கான விண்ணப்பத்தில் நீதவான் கையொப்பம் இட்டுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸவரம் மனித புதைகுழி வழக்கு வியாழக்கிழமை (24.11.2022) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் அப்துல் சமட் கிப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜராகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் இவ் வழக்கு தொடர்பாக தெரிவிக்கையில்நந

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் திருக்கேதீஸ்வரத்தின் மனித புதைகுழி வழக்கு இல. பி768 – 2013 ஆம் ஆண்டுக்கான வழக்கு நீதவான் அப்துல் சமட் கிப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக 24.11.2022 அன்று வியாழக்கிழமை எடுக்கப்பட்டபோது இவ் வழக்கில் ஏற்கனவே கட்டளை ஆக்கப்பட்டிருந்தது

அதாவது மன்னார் திருக்கேதீஸவரத்தில் கண்டபிடிக்கப்பட்டு மனித புதைகுழியிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் ஏற்கனவே அனுராதபுரம் வைத்தியசாலையில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.

இதன் எச்சங்களின் மாதிரிகளை எடுத்து சீ 14 காபன் பரிசோதனைக்கு அமெரிக்கா புலோரிடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக கொண்டு செல்வதற்கு மாதிரி தெரிவு செய்வதற்கான கட்டளை ஆக்கப்பட்டிருந்தது. அத்துடன் அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வழக்கு தொடுனர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைவாக கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்து மாதிரிகளை தெரிவு செய்வதற்கான நடைமுறைகளை அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் மேற்பார்வை செய்து அதற்கான மாதிரிகளை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன் பாரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அரச தரப்பினரால் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதாவது இதற்கான அனுமதியை கனம் நீதிபதி அவர்கள் வழங்குமாறு முன்வைக்கப்பட்டது. இதற்கமைய இதன் அனுமதிக்கான விண்ணப்பத்தில் நீதவான் கையொப்பம் இட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் அரச தரப்பு சட்டத்தரணிகளால் எதிர்வரும் மாதம் (மார்கழி) 5ந் திகதி சமர்ப்பணம் ஒன்று சமர்பிக்கப்பட இருக்கின்றது.

அத்தோடு இவ் வழக்கானது இதன் நடவடிக்கைக்காக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் 2023.02.09ந் திகதி மீண்டும் அழைக்கப்பட இருக்கின்றது

இவ் வழக்கில் அரசு தரப்பு சார்பாக சமந்த விக்கிரமசிங்க , இம் மனித புதைகுழி அகழ்வுக்கு தலைமைதாங்கி ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்தியரத்தின மற்றும் ஹேவகே ஆகியோருடன் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்ற புலணாய்வு பிரிவினரும் மன்றில் ஆஜராகி இருந்தனர்

அத்தோடு சேதமாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரணி திருமதி எஸ் புராதினியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

இம் மனிதப் புதைகுழியானது மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு நிலத்தடியின் ஊடாக குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் வேலைகளின் போதே கண்டுபிடிக்கப்பட்ட போதே கண்டுபிடிக்கப்ட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனித எச்சங்ள்  பகுப்பாய்வுக்கு மன்னார் நீதிமன்றம் அனுமதி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY