பேசாலையில் 'விழிகள் கலா முற்றும்' ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடுகை விழா

மன்னார் பேசாலை 'விழிகள் கலா முற்றும்' என்ற அமைப்பு பேசாலை பிரதான வீதியை அழகுபடுத்தும் நோக்குடனும் 'வான் மழை பெய்து மரஞ் செடி செழித்து பல்லுயிர் வாழனுமே' என்ற சிந்தனையை முன்னிருத்தி மாபெரும் மரநடுகை நிகழ்வை பேசாலையில் நடாத்தியது.

இவ் அமைப்பின் இயக்குனர் தேசிய கலைஞர் 'சாஹித்யா' எஸ்.ஏ.உதயன் தலைமையில் சனிக்கிழமை (05.11.2022) காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பேசாலை பங்கு தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவருமான அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் , 'மெசிடோ' நிறுவனத்தின் உதவி திட்டமிடல் அதிகாரியும் மன்னார் நகர சபை உறுப்பினருமான சூசை செபஸ்ரியான் ஜான்சன் , மன்னார் விவசாய திணைக்களத்தின் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி மெண்டிஸ் அல்ஜின் குரூஸ் , அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் தலைவர் பொறியியலாளர் எம்.எஸ்.ஏ.சுதாகர் , பேசாலை பீச் ஹோட்;டல் உரிமையாளர் பொறியியலாளர் ஏ.றொபட் பீரிஸ் ஆகியோர் உட்பட பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மன்னார் தலைமன்னார் பிராதான வீதியான ஏ14 வீதியின் பேசாலை எல்லைக்குட்பட்ட வீதியின் இரு பக்கங்களிலும் மரக்கன்றுகள் நடுகை செய்தோரின் விருப்பப் பெயரிடப்பட்டு இவ் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.

ஆன்மாவுக்கும் மரத்துக்கும் தொடபு இருப்தால் நாம் மரத்தை பாதுகாக்க வேண்டும்
அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார்

மரம் நாட்டும் விழா பல இடங்களில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ஆகவே மரம் காடு எமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்பது இது எண்பிக்கின்றது. உயிர் உடல் எம்மைவிட்டு பிரிந்தாலும் ஆன்மா எம்மைவிட்டு பிரியாது. ஆகவே ஆன்மாவுக்கும் மரத்துக்கும் தொடபு இருப்தால் நாம் மரத்தை பாதுகாக்க வேண்டும் என பேசாலை பங்கு தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவருமான அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

பேசாலை 'விழிகள் கலா முற்றம்' மரம் நாட்டு விழாவை சனிக்கிழமை (05.11.2022) பேசாலையில் முன்னெடுத்தது. இதில் அதிதியாக கலந்து கொண்ட பேசாலை பங்கு தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவருமான அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தொடர்ந்து உரையாற்றுகையில்

மரம் நடுகை விழா என்பது ஒரு பசுமை விழாவாகும். இது இன்று பேசாலையில் இடம் பெறுவது மனதுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகின்றது.

'வான் மழை பெய்து மரஞ் செடி செழித்து பல்லுயிர் வாழனுமே' என்ற இந்த வாக்கியமானது இதை நாம் சிந்திக்கும்போது மனிதனின் உடல் உயிர் ஆன்மா இவை மூன்றும் இணைந்ததே மனிதர்.

இவை மூன்றும் பிரிந்து தனித்து நிற்காது. உடல் அழிந்து போகும் உயிர் பிரிந்து போகும் ஆனால் ஆன்மா அழியாத ஒன்றாகும்.

ஆகவேதான் மரம் நாட்டுதலுக்கு ஒரு ஆன்மீக அடித்தளம் இருக்கின்றது. நாங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஆன்மீக தளம் இருக்கின்றது.

உலகத்தில் நாஸ்தீகன் என்று எவரும் இல்லை. ஒருவனுக்கு நாஸ்தீக கொள்கை இருக்கலாம். ஆனால் நாஸ்தீகனாக இருக்கவும் முடியாது.

எல்லா செயற்பாடுகளுக்கும் மனிதனிடம் ஒரு ஆன்மீக நிலை உள்ளது. மரம் பூமிக்கு கிடைத்த ஒரு வரம். இது மனித ஆன்மீகத்துடன் இணைந்த ஒரு வரப்பிரசாதம்.

இந்த மரம் நாட்டும் விழா பல இடங்களில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ஆகவே மரம் காடு எமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்பது இது எண்பிக்கின்றது.

எமது பகுதியில் பனை மிகவும் முக்கியமானதொன்றாக இருக்கின்றது. பனை வளத்தால்தான் பேசாலையில் நல்ல தண்ணீர் காணப்படுகின்றது.

ஏற்கனவே சில பனைகள் அழிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது அபிவிருத்தி என்ற போர்வையில் மேலும் பனைகள் அழிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் எமது ஆன்மீகத்துக்கு ஒரு பெரிய தாக்கம் ஏற்பட போகின்றது. இதன் முதல் பாதிப்பு தண்ணீர். அதாவது இந்த தண்ணீரை இரசமாக்கிற (பதனியாக்கின்ற) தன்மை இந்த பனை வளத்துக்கு இருக்கின்றது.

ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு புதுமை உண்டு. ஆகவேதான் நாம் எமது பிறந்த நாட்களில் வருடந்தோறும் ஒவ்வொரு மரம் நட வேண்டும்.

இவ்வாறு நாம் மரம் நடப்பட்டிருந்தால் இன்று எமது பெயரில் பல மரங்கள் இருந்திருக்கும். ஆகவேதான் நாம் மரங்களை அழிக்கக் கூடாது என்பதன் சாட்சியாக மரம் நாட்டு விழா அமைகின்றது.

வானம் மழை பூமி இது ஆன்மீகத்தோடு ஒரு தொடர்பானது. இந்த ஆன்மீகம்தான் செழித்து வளர்கின்ற மரமாகும். வானத்திலிருந்து மழையை ஈர்த்து தருகின்றதுதான் இந்த மரம்.

இது தனக்குள்ள மறைமுகமான சக்தியை கொண்டு இதை நமக்கு வெளிப்படுத்தி மனிதராக இருக்கின்ற எம்மோடு உறவு கொண்டுள்ள மரங்களை நாம் வளர்க்கிறபோது உண்மையில் இது எமக்கு ஆன்மீக பயணமாகின்றது.

உயிர் உடல் எம்மைவிட்டு பிரிந்தாலும் ஆன்மா எம்மைவிட்டு பிரியாது. ஆகவே ஆன்மாவுக்கும் மரத்துக்கும் தொடபு இருப்தால் நாம் மரத்தை பாதுகாக்க வேண்டும்.

ஆகவேதான் இந்த 'விழிகள் கலா முற்றம்' எடுக்கும் இந்த முயற்சிக்கு நான் பாராட்டுத் தெரிவிக்கின்றேன்.

வெளியார் வரும்போது பேசாலைக்கு ஒரு அடையாளம் இல்லாத நிலை காணப்பட்டு வருகின்றது. ஆகவே இதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என இவ்வாறு வேண்டிக் கொண்டார்.

பேசாலையில் 'விழிகள் கலா முற்றும்' ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடுகை விழா

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)