பாகிஸ்தான் தூதுவர்  யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
பாகிஸ்தான் தூதுவர்  யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பொது நூலகம்

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலகத்தைப் பார்வையிட்டர்.

அதன்போது, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன் தூதுவரை வரவேற்றதோடு யாழ்ப்பாண பொது நூலகத்தின் சிறப்புகள் மற்றும் வரலாற்று ஆவணங்களைக் காண்பித்தார்.

பாகிஸ்தான் தூதுவர்  யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பருத்தித்துறை முனை

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் இனறு புதன்கிழமை பருத்தித்துறை முனைக்கு வருகை தந்தார்.

தனது சகாக்கள் சகிதம் பருத்தித்துறை முனைக்கு வந்த பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கிக்கு அதிகளவான பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்தப் பயணத்தின்போது, சக்கோட்டை இராணுவ முகாமுக்கு சென்ற அவர் அதன் அருகான பகுதிகளைப் பார்வையிட்டதுடன், பருத்தித்துறை முனை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

இதேசமயம், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சீன தூதுவர் கீ சென்ஹொங்கும் பருத்தித்துறை முனையை பார்வையிட்டிருந்தார். அயல்நாடான இந்தியாவின் போட்டி நாடாக சீனா பார்க்கப்படும் நிலையில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தூதுவர்  யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)