பலவகைச் செய்தித் துணுக்குகள்

வானிலை அறிவித்தல்

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது..



சிறுவனைத் தாக்கி ஆசிரியை கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி நிலையம் ஒன்றில், 3 வயது சிறுவன் ஆசிரியையால் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் தற்போது சிகிச்கைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த ஆசிரியை சிறுவர்களுக்கு கோலாட்டம் பழக்கியுள்ளார். இதன்போது சிறுவன் தவறிழைத்ததாக தெரிவித்து அவனை கோலாட்ட தடியால் அடித்துள்ளார். பின்னர் சிறுவனின் அழுகையை அடக்குவதற்கு முயற்சித்துள்ளார். இதனால் முகத்தில் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 36 வயதான அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY