
posted 18th November 2022
நானாட்டான் பிரதேச சபையின 2023ம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது
நானாட்டான் பிரதேச சபையின் 58 வது சபை அமர்வு நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞ்சோதி அவர்களின் தலைமையில் புதன்கிழமை (16) காலை 9.45 மணியளவில் சபையின் தவிசாளர் பரஞ்சோதி தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சென்ற ஆண்டை விடஇ இப்பாதீட்டில் 40 மில்லியன் மேலதிகமான நிதிஇ பல்வேறு அபிவிருத்தி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
முருங்கன் உப அலுவலகப் பிரிவில் டுனுளுP திட்டத்தில் இவ்வாண்டு (2022) கட்டி முடிக்கப்பட்ட கடைத்தொகுதி மூலமாக கிடைக்கப்பெற்ற நன்மதிப்புத்தொகை 16.4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டு நிதியில் அபிவிருத்திக்காக நிலையான வைப்பில் இடப்பட்டுள்ளது.
இந்நிதியை நானாட்டான் நகர்ப் பகுதியில் 2023ம் ஆண்டு கடைத்தொகுதி அமைப்பதற்கு வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் நானாட்டான் கடைத்தொகுதியில் கிடைக்கப்பெறும் நன்மதிப்புத் தொகையிலிருந்து வங்காலை உப அலுவலகப் பிரிவில் பொதுச்சந்தை அமைப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)