
posted 30th November 2022
எள்சார் உற்பத்தி நிலையம் கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி. ரூபாவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு ,நேற்று (29.11.2022) திரு.வே. தமிழ்ச்செல்வன் தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் IOM நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அமைக்கப்பட்ட எள்சார் உற்பத்தி நிலையம் கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி. ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர், கரைச்சி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராஜ், உதவி பணிப்பாளர் திரு சசீபன், IOM நிறுவனத்தின் கொழும்பு அலுவலக பிரதிநிதி கயானி, IOM நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு ஜெமீன் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)