
posted 15th November 2022
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு பல்வேறு தரப்பினராலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.
இதன்படி இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கட்சியொன்றும் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுளள்மைக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
தமிழ் நாடு எஸ்.டி.பி.ஐ.எனும் மேற்படி கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் (எம்.ஏ.) கட்சி சார்பில் அனுப்பிவைத்துள்ள இந்த வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தக்கடிதம் தங்களை எல்லாவித பூரண நலன்களுடன் சந்திக்கட்டுமாக,
சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக மீண்டும் தாங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகவும் சந்தோசமடைந்தேன். எமது எஸ்.டி.பி.ஐ கட்சியின் (தமிழ் நாடு) சார்பாக தங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் பொருளாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிமுக்கும் மற்றமுள்ள புதிய நிருவாகிகளுக்கும் மனமாரந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இக்கட்டான சூழலில் தங்களின் ஆலோசனைகள் இலங்கையில் வாழ்கின்ற மக்களுக்க மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கைக்குமே தேவைப்படும் ஒன்றாகும்.
அதேபோல் இலங்கையின் பூர்வீக தமிழ்களுக்கும் உங்களது சீரிய பணிகள் மிகவும் அவசியமானதாகவுமுள்ளது. அந்த வகையில் உங்களுடைய பணிகள் மென்மேலும் சிறக்கப் பிரார்த்தனை செய்கின்றேன்” என்றார்.
அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக உதவியாளரும், ஐ.சி.ரி. இணைப்பு உத்தியோகத்தருமான விழாக்குழு செயலாளர் ஏ.சீ. நளீர் நிகழ்வில் நன்றியுரையாற்றினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)