ஜனாதிபதி ரணில் மன்னாருக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஞாயிற்றுக் கிழமை (20.11.2022) காலை மன்னார் மாவட்டத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சனைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.

மன்னார் நகருக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முதலில் மன்னார் நகருக்குள் இருக்கும் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

இதன் பின்னர் நடுக்குடா மீனவ கிராமத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மீனவ சமூகத்தவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன் அவர்களின் பிரச்சனைகளையும் டே;டறிந்தார்.

நடக்குடா மீனவ கிராம மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு உறுதியளித்தார்.

மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மானிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி அவதானித்ததுடன் காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்ததுடன் இவ் வேளையில் அப்பகுதி மக்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்தார்.

கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , மின் சக்தி வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் , ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க , மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் மற்றும் அரச அதிகாரிகள் இவ் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

ஜனாதிபதியின் மன்னார் விஜயத்தின்போது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மாத்திரமே அனுமதிக்கப்பட்டபோதும் பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் மன்னாருக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY